207பேரின் பரீட்சை முடிவுகள் இடைநிறுத்த நடவடிக்கை!

கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 207 பரீட்சார்த்திகளது பரீட்சை முடிவுகளை இடைநிறுத்துவதற்கு, பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பரீட்சைகளின் போது இடம்பெற்ற ஆள்மாறாட்டம், கையெழுத்து மாற்றம், விடைத்தாள் பரிமாற்றம், அலைபேசி வைத்திருத்தமை போன்ற ஆறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களத்திற்கு 4,174 முறைப்பாடுகள் கிடைத்தன.
இந்த முறைப்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் ஆராய்ந்ததில், 3,967 பேரினது பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய 207 விண்ணப்பதாரர்கள் தொடர்பில் தனி விசாரணைகள் நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.