பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரிக்க அரசு அனுமதி!
இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோ பால்மாவின் விலையினை 200 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பால்மாவினை இறக்குமதி செய்யப்படும் நிறுவனங்களது அமைப்பு இதற்கான கோரிக்கையினை விடுத்திருந்தது.
இந்நிலையில் வாழ்க்கை செலவு குழு விலையினை அதிகரிப்பதற்கு அனுமதியை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.