பிரதமர் ஹரிணி மன்னாருக்கு விஜயம்

இன்றைய தினம் (நவம்பர் 4) இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மன்னாருக்கு விஜயம் செய்தார். காலை 11 மணியளவில், மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வன்னி மாவட்ட பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) வேட்பாளர்களை ஆதரித்து அவர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரனும் பங்கேற்றார். கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர், இதில் வன்னி மாவட்ட வேட்பாளர்களும் இணைந்தனர்.

பிரதமர் வருகைக்கு முன்னிட்டு மன்னார் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மக்கள் கடுமையான சோதனைகளை எதிர்கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.