புங்குடுதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் நிதி மோசடி!

புங்குடுதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் 53 லட்சம் ரூபா நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளன. குறித்த சங்கத்தில் ஆறு பணியாளர்கள் பணிபுரிகின்றனர், மற்றும் இதில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்கி வருகிறது.

13 மாதங்களுக்குள் 53 லட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த மோசடி, சங்கத்தின் ஆவணங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாத காரணத்தினால் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.