பெட்ரோல் Ethanol விலையினை உயர்த்தியது மத்திய அரசு..!
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையினை பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மூலம்தான் ஈடுகட்டபட்டு வருகின்றது.
இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும், ரூபாய் மதிப்பு வளர்ச்சிக்கும் தடையாக இருக்கின்றது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற கச்சா எண்ணெயின் அளவினை குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பெட்ரோலில் எத்தனால் (Ethanol) கலக்கும் திட்டத்தினை கொண்டு வந்தது.
இதன்படி இன்று எத்தனால் விலையினை நாடாளுமன்றத்தில் ஒரு லீட்டருக்கு 1.47 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.