பேஸ்புக் நண்பியால் ஏற்பட்ட இழப்பு! மக்களே அவதானம்!

கொட்டு கொட பகுதியிலுள்ள வீடொன்றில் பேஸ்புக் நண்பியை வீட்டிற்கு அழைத்தபோது, நண்பி வீட்டிலுள்ள தங்க நகைகள் களவாடி சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் ஊடாக நட்பை ஏற்படுத்தி திருடிய குற்றச்சாட்டில 24வயதான பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் ஊடாக சீதுவ பகுதியை சேர்ந்த 23வயது யுவதியுடன் நட்பை ஏற்படுத்தி கொண்ட சந்தேக நபர், அந்த யுவதியின் வீட்டுக்கு இரு தடவைகள் சென்று வந்துள்ளார். இந் நிலையில் குறித்த இரு தடவைகளும் யுவதியின் வீட்டில் இருந்த தங்க நகைகளைத் திருடியமை தெரிய வந்துள்ளது.

இறுதியாக நேற்று முந்தினம் யுவதியின் வீட்டுக்குச்சென்ற சந்தேக நபர், சுமார் மூன்றரைப்பவுன் தங்க நகைகளைத் திருடியளமை விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவ பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.