மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் மன்னாருக்கு விஜயம்!
மன்னாரில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் குழு நிவாரணம் வழங்கி, அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை (01) மன்னாருக்கு வந்த குழுவில் பிரதமரின் செயலாளர்கள் மற்றும் மன்னார் மாவட்ட அதிகாரிகள் இணைந்து, இடம்பெயர்ந்த மக்களை சந்தித்து, சுகாதார பொருட்கள், உணவு பொதிகள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கினர்.
அமைச்சர் சரோஜா போல்ராஜ், வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுத்து, சமூக சேவைகளை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தார்.