மாநாட்டு இடமாக இலங்கையை மேம்படுத்த அரசாங்கம் விசேட வேலைத்திட்டம்
இலங்கையை ஒரு மாநாட்டு இடமாக மேம்படுத்தும் விசேட வேலைத்திட்டம் 2023 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலங்கை MICE Expo 2023 இன் வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இதற்காக ஒரு எக்ஸ்போ நடத்தப்படும் என்று கூறினார்.
வெளிநாட்டு சுற்றுலாவுக்காக மாத்திரம் இலங்கை ஊக்குவிக்கப்படாது எனத் தெரிவித்த அவர், 5 முதல் 6 நாட்களுக்கு நடைபெறும் மாநாடுகளுக்கான இடமாகவும் நாடு மேம்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் இலங்கையின் அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தணிக்க உதவும் வெளிநாட்டுப் பிரஜைகளை பெரிய குழுக்களாக அழைத்து வர முடியும் என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார்.
தற்போதைய நடவடிக்கைகள் சரியான முறையில் பின்பற்றப்பட்டால் 2024 ஆம் ஆண்டளவில் இலங்கை ஸ்திரமாகிவிடும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.