மீண்டும் இணைந்த மலையாள சுப்பர் ஸ்டார்கள்!
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொடக்க விழா இலங்கையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தில் மோகன்லால், மம்முட்டி, பகத் பாஸில், நயன்தாரா, குஞ்சாக்கோ போபன், ரஞ்சி பணிக்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் இலங்கை, லண்டன், அபுதாபி, தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட இடங்களில் 150 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது, மேலும் பிரபல தயாரிப்பாளர் ஆண்டனி ஜோசப் தயாரிக்கிறார்.