லொஹான் ரத்வத்தையின் மனைவிக்கு விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தையை எதிர்வரும் நவம்பர் 7 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கங்கொடவில நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவருடைய வீட்டில் இலக்க தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அதன் பின்னர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை கண்டி பகுதியில் வைத்து அக்டோபர் 31 ஆம் தேதி கைது செய்தனர்.