வளர்ப்பு மகளை திருமணம் செய்யும் புதிய சட்டம்
ஈரானில் வளர்ப்பு மகளை திருமணம் செய்வதற்கு அனுமதி வழங்கும் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த சட்டத்தின் அடிப்படையில், தந்தையாகக் கருதப்படும் நபர் தனது வளர்ப்பு மகளை 13 வயதை எட்டிய பிறகு திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்.
மேலும், ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் அலிரேசா ரைசி, இளமையான சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தில், 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதும், அந்த நாட்டின் குழந்தை திருமணப் பிரச்சினையை உலகளாவிய பிரச்சினையாக உருவாக்கி இருக்கிறது.
அதே நேரத்தில், வருடத்தில் ஈரானில் 15 வயதுக்கு குறைவாக 1.84 லட்சம் சிறுமிகள் சராசரியாக திருமணம் செய்கின்றமை அந்த நாட்டில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், சிறுமிகளின் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தாமல் அவர்களின் உரிமைகளை மீறுகிறதென கூறி இந்த சட்டத்தை கண்டித்தும், இத்தகைய நடைமுறைகள் பெண்களின் உரிமைகளுக்கு பேரழிவாக இருக்கும் என எச்சரித்தும் வருகின்றன.