வீதிகளில் நடமாடினால் பீசீஆர் பரிசோதனை! மக்களுக்கு எச்சரிக்கை!
கொவிட் தொற்று சமூக மட்டத்தில் பரவியுள்ள நிலைமை குறித்து ஆராய்வதற்காக வீதிகளில் நடமாடுபவர்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதனை சுகாதார சேவை இயக்குனர் விசேட வைத்தியர் அசேலகுணவர்தன உறுதிப்படுத்தினார்.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுபாடுகளை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்கப்படுவது குறித்து தற்போதுவரையில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
அதற்கமைய நோய் எந்த அளவு சமூகத்திற்கு பரவியுள்ளது என்பதை சனிக்கிழமை வரை உறுதி செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் பீசீஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
ஆகவே சனிக்கிழமை தீர்மானமிக்க ஒரு நாளாகும்.
இப்பொழுது அமுல் படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாட்டினை மக்கள் மீறி செயற்படுவதை அவதானிக்க முடிவதாக சுகாதார அமைச்சசின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.