வெள்ளத்தில் வேடிக்கை பார்க்க சென்ற 20 பேர், மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
வெள்ளத்தில் உல்லாசமாகச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற படகு உயர் மின்கம்பியில் மோதி 20 பேர் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனையோர் உயிர் பிழைத்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புலத்சிங்கள திவலகட பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளதுடன், அந்த இளைஞன் சுமார் இருபது பேர் கொண்ட குழுவுடன் நேற்று (03) மாலை வெள்ளத்தைப் பார்ப்பதற்காக படகில் சென்று கொண்டிருந்தார்.
குறித்த குழுவினர் பயணித்த படகை உயிரிழந்த இளைஞன் ஓட்டிச் சென்ற போது மேல்நிலை மின்கம்பியில் மோதி வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்துளார்.
படகில் இருந்தவர்கள் மீது மின்சாரம் தாக்கியதாகவும் அவர்கள் படகிற்குள் விழுந்ததாகவும், ஆனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.