அனைத்து முக்கிய பரீட்சைகளும் பிற்போடப்பட்டது!
க.பொ.த உயர்தர பரீட்சையும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையும் முன்னர் அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இவ்வாண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை நவம்பர் 14ம் திகதி நடத்துவதற்கு முடிவெடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2021 க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ம் திகதி வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தரம் 1இற்கு மாணவர்களை சேர்த்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 07 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.