ஆர்ப்பாட்டத்தை தடுத்த OIC படுகாயம்!
கொத்தலாவ சட்டமூலத்திற்கு எதிராக நேற்று நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மையினால், மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான ஜனகாந்தவிற்கு கடும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவசர சத்திரசிகிச்சை நடத்துவதற்காக அவரை தலவத்துகொட பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் பொறுப்பதிகாரியின் மூன்றுவிரல்களில் கடும்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த OICக்கு , சுமார் 3மணிநேர சத்திரசிகிச்சை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.