தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா என இன்னும் தீர்மானமில்லை
(LBC Tamil) உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளதாக வௌியாகியுள்ள கருத்து தொடர்பாக இரா.சம்பந்தனிடம் வினவியபோது அவர் இதனைக் கூறினார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என உறுதியளித்த அவர் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என குறிப்பிட்டார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடுவது பற்றி பங்காளி கட்சிகள் தங்களின் கருத்துகளைக் தெரிவித்துவரும் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை கூறியுள்ளார்.