எயிட்ஸ் நோயாளிகளின் உரிமைகள் காக்கப்படும்: பிரதமர் ஹரிணி!
சமூகத்தில் எயிட்ஸ் நோயைச் சுற்றியுள்ள மனோபாவம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் தொடர்பில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் உரையாற்றிய அவர், நோயின் ஆரம்ப காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய சூழல் புரிந்துணர்வு மற்றும் சிகிச்சை முன்னேற்றங்களால் மாற்றமடைந்துள்ளது எனக் கூறினார்.
அதேநேரத்தில், தொற்று நோய்களைத் தடுப்பதில் மனித உரிமைகளை மதிப்பது அவசியமானதாகவும், சமூகத்தின் நல்லுணர்வு மற்றும் உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.