ஓயாமடுவில் இளைஞன் கொலை சந்தேகநபர் கைது!
ஓயாமடுவ – நவோதகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) பண்டாரகம, பேமதுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கூரிய ஒருவர் ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார் எனவும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம் பெறுவதாகவும் ஓயாமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.