கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு 127.191 மில்லியன் ரூபா நிதி வைப்பு!
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கான பெரும் போக பயிர் செய்கைக்கான நிதி கொடுப்பனவுகளின் முதற்கட்ட தொகையாக 127.191 மில்லியன் ரூபா வங்கி கணக்குகளில்வைப்பிலிடப்பட்டுள்ளது.
2024/2025 பெரும் போக பயிர் செய்கையில் ஈடுபட்ட 9064 விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது பூனகரி, இராமநாதபுரம், புளியம்பக்கணை, பரந்தன், கண்டாவளை, முழங்கா, பளை மற்றும் கிளிநொச்சி ஆகிய கமநல சேவை நிலையங்களின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.