கொரோனோ தொற்றில் இருந்து குணமடைந்த பெண் மரணம்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் குணமடைந்து வீடு திரும்பிய அடுத்த நாளே உயிரிழந்த சம்பவமொன்று தென்னிலங்கையில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அக்மீமன பகுதியைச் சேர்ந்த 62 வயதான பெண்ணொருவரென தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் 16 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதன்பின் குணமடைந்து வீடு திரும்பிய அடுத்த நாளே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதன்பின் நடாத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவே உயிரிழந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.