க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்: ஜனாதிபதி அலுவலகம்
ஜனாதிபதி நிதியத்தின் கீழ் க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
2021/2022 க.பொ.த (சா/த) சித்தியடைந்த மற்றும் 2024 இல் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிதியைப் பயன்படுத்தி புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 30 வரை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட புலமைப்பரிசில் திட்டத்துக்காக உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று (23) அல்லது அதற்கு முன்னர் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களிடம் ஏற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டது.
எனவே முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாணவர் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைகளின் அதிபர்களிடம் டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் அறிவுறுத்துகிறது.
டிசம்பர் 23 மற்றும் 2023 ஜனவரி 02 ஆம் திகதிக்கு இடைப்பட்ட விடுமுறையின் போது பாடசாலைகளின் அலுவலகங்களிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுவதை உறுதிப்படுத்தும் பொறிமுறையை வகுக்குமாறு ஜனாதிபதி செயலகம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி டிசம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள போதிலும் தெரிவு தொடர்பான ஏனைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் நாட்களில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதி நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.