சேதமடைந்த பயிர் நிலங்கள் குறித்து அரசின் தீர்மானம்!
சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கும் முக்கிய 6 பயிர்களுக்கு மேலதிகமாகவும் ஏனைய பயிர்களுக்கு ஓரளவு நஷ்டஈடும் வழங்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் ,நெல், மக்காச்சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் ஆகிய 6 பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது. கனமழையால் சேதமடைந்த விவசாயிகளுக்கு இந்த இழப்பீடு அந்த 6 பயிர்களுக்கும் பொருந்தும். மேலும், அரச திறைசேரியில் உள்ள பணத்திற்கு இழப்பீடு வழங்கவும், நிலைமையை கருத்தில் கொண்டு, அமைச்சரவையிடம் கோரிக்கை வைக்க தயாராக உள்ளோம் எனவும் கூறினார்.