ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி
(LBC Tamil) இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகை குறிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்து விடுதலையின் மகிழ்ச்சியை பறை சாற்றும் ஒரு மகிழ்ச்சியான பண்டிகை இதுவென அவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார நெருக்கடி நிலையில் ஒருவரையொருவர் இரக்கத்துடனும் அன்புடனும் வாழ்த்தி, சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவிற்கு செய்யும் கௌரவம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.