நெடுத்தீவில் இருந்து நோயாளிகள் ஹெலிஹப்டர் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்!
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து டெல்ஃப்ட் தீவில் உள்ள நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் விமானம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கும் டெல்ஃப்ட் தீவுக்கும் இடையிலான வழமையான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை விமானப்படை நோயாளர்களை நெடுந்தீவில் இருந்து விமானம் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு ஏற்றிச் சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.