துபாய் வேலை மோசடி : பெண் கைது!
துபாயில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி அம்பாறை, பதுளை மற்றும் பிபில உள்ள பல்வேறு பிரதேசங்களில் 37 நபர்களிடமிருந்து 02 கோடியே 12 இலட்சம் ரூபாவை பண மோசடி செய்து இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர், சந்தேக நபரான பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.