இன்று பருத்தித்துறையில் இருவர் கொரோனாவால் பலி!
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்றைய தினம் இருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் வல்வெட்டிதுறையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் எனவும் மற்றையவர் கம்பர்மலை பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் எனவும் தெரியவந்துள்ளது.