பொதுத் தேர்தல்: மை பூசும் விரலில் மாற்றம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை, இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (11) ஊடகங்களுக்குப் பகிரப்பட்டு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பலருக்கு மை அடையாளங்கள் இருந்ததை நினைவுகூறி, தேர்தல் ஆணைக்குழு புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான அனைத்து முதற்கட்டப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும், சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவும் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.