முன்னாள் எம்பிகள் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு!
பாதுகாப்புக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள், மற்றும் அரசு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை நேரடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும், இவ்வாறு ஒப்படைக்கப்பட வேண்டிய துப்பாக்கிகள் பெற்ற நபர்களின் பெயர் பட்டியல் இலங்கை பொலிஸ் துறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர்களை சரிபார்த்து, துப்பாக்கிகளைப் பொலிஸ் காவலில் எடுக்க அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.