யாழ் கொட்டடி பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!
நேற்று யாழ்ப்பாணத்தில் 120 மில்லி கிராம் ஹெரோயினுடன் 22 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த அவரை, யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். விசாரணைகளின் முடிவில், அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸ் தகவல் தெரிவிக்கிறது.