யாழ் வலிகாமம் வடக்கில் மூன்று வெடிகுண்டுகள் மீட்பு

(LBC Tamil) யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சில இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
யாழ். பலாலி தையிட்டி பகுதியிலுள்ள குளக்கட்டின் அருகில் மூன்று குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து, அனுமதி பெற்றதன் பின்னர் குண்டுகளை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸார் விசாரணகளை ஆரம்பித்துள்ளனர்.