இன்று 21 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, இன்று காலை10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். அதன்படி, 21 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அதற்கமைய, மீண்டும் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்படவுள்ள அதேவேளை அவர் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக விஜித ஹேரத்தும், பொது நிர்வாகம், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சராக ஷந்தன அபேரத்னவும், நீதி, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக சட்டத்தரணி ஹர்சன நாணயக்காரவும் ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

மேலும், சரோஜா சாவித்திரி போல்ராஜ் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் அமைச்சராகவும், லால் காந்த கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசனம் அமைச்சராகவும், அநுர கருணாதிலக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரனும், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே , கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்னெத்தியும், பொதுமக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜேபாலவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிமல் ரத்னாயக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராகவும், ஹினிதும சுனில் செனவி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராகவும், நலிந்த ஜயதிஸ்ஸ சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகம் அமைச்சராகவும், சமந்த வித்யாரத்ன பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராகவும் இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

இவர்களுடன் சுனில் குமார கமகே- விளையாட்டு, இளைஞர் விவகாரம் அமைச்சராகவும், வசந்த சமரசிங்க -வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராகவும், கிருஷாந்த சில்வா அபேசேன – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தொழில் அமைச்சராக அனில் ஜயந்த பெர்னாண்டோவும், வலுசக்தி அமைச்சராக குமார ஜயகொடியும் சுற்றாடல் அமைச்சராக தம்மிக்க பட்டபெந்தியும் ஜனாதிபதியால் இன்று முதல் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.