இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம்!
கடற்றொழில் நீரியல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே, கடும் மழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
பொத்துவில் மீனவ மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்த பிரதியமைச்சர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீனவர்களுக்கு கடுமையான பாதிப்பு இடம்பெற்றுள்ளதாகவும், 16 படகுகள் அழிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பல மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், ஜனாதிபதி அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.