இலங்கை-நெதர்லாந்து விமான சேவை ஒப்பந்தம் கையெழுத்தானது

நெதர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம் நேற்று(22) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஹேக்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய மற்றும் ஆசிய பிராந்தியங்களுக்கும் இடையிலான தொடர்பைத் தீவிரப்படுத்த இவ் ஒப்பந்தம் வலுவான தளத்தை வழங்குமென தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டச்சு பயணிகள் மத்தியில் இலங்கை ஒரு பிரபலமான இடமாக இருந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில் சில பயணக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் 11,987 டச்சு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணம் செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.