ஏழரை கோடி ரூபா பெறுமதியான பணத்தை திருடி தப்பிச் சென்ற சாரதி கைது!
கம்பஹா, மினுவாங்கொடை பகுதியில் ஏழரை கோடி ரூபா பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில், சந்தேக நபராக இருந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா மினுவாங்கொடை பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின் பணியாளர் குழுவினர், கடந்த 18ஆம் திகதி நிறுவன சொந்த வாகனத்தில் பணத்தை எடுத்துச் செல்வதற்காக பயணித்தனர்.
வாகன சாரதி, பணியாளர்கள் வெளியே சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பணத்தை எடுத்துச் சென்று தப்பிச் சென்றதாக குற்றச்சாட்டு உள்ளது.
பின்னர், கம்பஹா உக்கல்கொட பகுதியில் வாகனம் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.