ஐந்து தமிழ் கட்சிகளின் கூட்டணி உதயம்
(LBC Tamil) ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன.
புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பித்த சந்திப்பின் பின்னர் கூட்டணி அறிவிக்கப்பட்டது.
சின்னம் தொடர்பில் இழுபறி காரணமாக தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் பங்குபற்றிய விக்னேஸ்வரன் மணிவண்ணன் இடை நடுவில் வெளியேறினர்.
தமிழரசி கட்சி தனியாக போட்டியிட முடிவெடுத்த பின் ஏனைய தமிழ் கட்சிகளை இணைத்து குறித்த கூட்டணி உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.