ஒழுக்கம் பற்றி விவேகானந்தர் சொன்னவை!

50. உலகிலுள்ள மதங்கள் எல்லாம் உயிரற்ற வெறும் கேலிக்கூத்தாக இருக்கின்றன. இப் பொழுது உலகத்துக்குத் தேவைப்படுவது ஒழுக்கம்தான். தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். இத்த கைய அன்புடையவர் சொல்கிற ஒவ்வொரு சொல்லும் இடியோசை போல எங்கும் முழங்கும்.

51. சுயநலமே ஒழுக்கக் கேடு; சுயநல மின்மையே நல்லொழுக்கம். இதுதான் ஒழுக் கத்திற்கு நாம் கொடுக்கக்கூடிய ஒரே இலக் கணமாகும்.

52. உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால், எதன்பொருட்டும் உண்மையைத் துறக்கக்கூடாது.

53. ஒரு மனிதன் குற்றம் குறைகளுடன் தாழ் வுற்று இருப்பதற்குக் காரணம், அவன் உயர்ந்த இலட்சியங்களை அறியாததுதான். அவன் தவறுகள் செய்வதற்குக் காரணமும் அதுவே தான். நல்லவற்றை அவனுக்குப் போதியுங்கள். அவன் திருந்தி நல்லவன் ஆகிவிடுவான்.

54. துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்த விதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லா மல், இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டித் தடுமாறிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

உயர்ந்த இலட்சியமுள்ள ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், இலட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறு களைச் செய்வான் என்று நான் உறுதியாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத் தைக் கொண்டிருப்பது மேலானது.

55. சிந்தனையின் தொண்ணூறு சதவி கித ஆற்றல் சாதாரண மனிதனால்
வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துகொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ஒருபோதும் தவறு
செய்வதில்லை.

56. நமது பிரார்த்தனையில் இறைவனை நம் அனைவருக்கும் தந்தையாக ஒப்புக்கொண்டு, நமது தினசரி வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனையும் நமது சகோதரனாக நடத்தாமல் போனால், அதனால் என்ன நன்மை ஏற்படும்?

57. பிறரது குற்றங்களைப்பற்றி ஒரு போதும் பேசாதே. அவை எவ்வளவு கெட்டவை ஆனாலும் சரி; அதனால் எந்தப் பயனும் என்றும் விளைவதில்லை.

ஒருவனுடைய குற்றங்களைப் பற்றிப் பேசு வதனால் அவனுக்கு ஒருநாளும் நீ உதவி செய் தவனாகமாட்டாய். மாறாக அவனுக்கும் கேடு செய்து, உனக்கும் கேடு இழைத்துக்கொள் கிறாய்.

58. கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது. இது என் உறுதியான நம்பிக்கை.

59. ஆசாரம் என்ற சொல் அகத் தூய்மை யையும் குறிக்கும்; புறத் தூய்மையையும் குறிக் கும். புறத் தூய்மையை நீராலும் சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி நடப்பதனாலும் பெற
முடியும். பொய் சொல்லாமை, மது அருந் தாமை, தீய நெறிகளில் செல்லாமை, பிறருக்க நன்மை செய்தல் ஆகியவற்றால் அகத் தூய்மை ஏற்படும்.

60. உண்மை , தூய்மை , சுயநலமின்மை ஆகிய இந்த மூன்றும் எங்கெல்லாம் காணப் படுகின்றனவோ, அவற்றைப் பெற்றிருப்பவர் களை நசுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்கும் கிடையாது.

இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு .

61. தாய்நாடு, மக்கள் சமுதாயம், சத்தியம் இவற்றை உண்மையாகவே நேசித்து எவன் பணிவுடன் நடக்கிறானோ, அவனால் உலகத் தையே ஓர் அசைப்பு அசைத்துவிட முடியும். ஆற்றல்களுக்கு எல்லாம் அடிப்படையாய் இருப்பது ஒழுக்கமேயன்றி வேறு எதுவும் அன்று .

62. எல்லாரிடத்திலும் சம அன்பு கொள்ளு தல் மிக மிகக் கடுமையான ஓர் ஒழுக்கம் ஆகும். இந்த ஒழுக்கம் இன்றி முக்தி கிட்டாது.

63. எந்தக் காலத்திலும் தைரியத்தை இழக்காதே. சாப்பிடும்போதும் உடுத்தும்
போதும் படுக்கும்போதும் பாடும்போதும் விளையாடும்போதும் மகிழ்ச்சியிலும் நோயிலும் எப்போதும் மிகவும் உயர்ந்த ஒழுக்கத் துடன் கூடிய தைரியத்தை உன்னிடமிருந்து வெளிப்படுத்து. அதன் பிறகுதான் மகா சக்தியான ஜகன்மாதாவின் கருணையைப் பெறுவாய்.

64. உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒழுக்க மும் ஆண்மையும்தான். கோழைத்தனம் இன்மை, பாவமின்மை, பலவீனமின்மை இவையே தேவை. மற்றவை தாமாகவே உங் களைத் தேடி வரும்.

உள்ளத்தைத் தூண்டக் கூடிய, உணர்ச்சியை எழுப்பக்கூடிய கேளிக்கை, களியாட்டங்களுக்குச் செல்ல வேண்டாம். நாடக மேடைகளை நாட வேண்டாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.