கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்திற்கு தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி பணத்தை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டதாக ரிலையன்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணையில், ரிலையன்ஸ்-க்கு முழு தொகையும் இன்று செலுத்தப்பட்டதாக தெரிவித்துக்கொண்டதன் பின்னர், படத்திற்கு தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இயக்குநர் சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “கங்குவா” படத்தின் நான்காவது பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் நடிகர்கள் திஷா பதானி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜி மாரிமுத்து, ரவி ராகவேந்திரா, கேஎஸ் ரவிக்குமார், பிஎஸ் அவினாஷ் மற்றும் தீபா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



