காதலிக்க மறுத்த இளம்யுவதியை கொன்ற இளைஞர் இரத்தினபுரியில் சம்பவம்

காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த 23 வயதுடைய முன்னாள் இராணுவ பெண் சிப்பாயை கொட்டனால் அடித்து கொன்ற, பாண் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை இரத்தினபுரி சிறிபாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவல, கிலிமலே வெலேகொட வீதியில் நேற்று முன்தினம் (04) காலை 7.30 மணியளவில் யுவதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு தலைக்காதலன் கொட்டனால் யுவதியின் தலை மற்றும் உடம்பில் அடித்தான். யுவதி இரத்தக் காயங்களுடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.எம். அஹிம்சா சமன்மாலி என்ற இந்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யுவதி நான்கு வருடங்கள் இராணுவத்தில் கடமையாற்றியவர்.முச்சக்கரவண்டியில் நடமாடும் பாண் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் பலமுறை காதலிக்கக் கேட்டதாகவும், ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் யுவதியின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

யுவதி நடந்து சென்ற போது பின்னால் வந்து அவரது தலையில் தாக்கினார், மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடியை பொலிசார் கண்டுபிடித்தனர். தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலையுண்ட யுவதி இரத்தினபுரி நகரில் உள்ள வர்த்தக நிறுவனமொன்றில் அலமாரி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக பணம் செலுத்தியதாகவும், அதனை எடுத்து வருவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற வேளையில் சிறிபாகம சுதாகல வீதியில் வைத்து தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த யுவதி தனது பாட்டி வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு வீடு திரும்பியுள்ளார். உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று (05) இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது. மாஜிஸ்திரேட் விசாரணையும் நேற்று நடந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.