கூட்டமைப்பு எம்பிக்களை காணோம்
2024 வரவு செலவு திட்ட வாக்களிப்பில் 5 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமறைவாகிவிட்டதாக தெரியவருகின்றது.
ரணிலை தனித்து சுமந்திரன் சாணக்கியன் சந்தித்துள்ள நிலையில் ஜவர் வாக்களிப்பின் போது காணாமல் போயுள்ளனர்.
இதனிடையே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2 ஆம் கட்ட நிதியை வழங்க சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, முதல் மதிப்பாய்வின் நிறைவில் 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதி உடனடியாக இலங்கைக்கு வழங்கப்படுகிறது
இந்நிலையில் நிதி இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வெளியிட்ட அறிக்கையில்
கடந்த வருடத்தில் நாம் எதிர்கொண்ட சவால்களை வெற்றிகொள்ள உறுதியுடன் நிலைத்து நிற்கும் இலங்கை மக்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட நமது லட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் குறுகிய காலத்திற்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை எட்டியது.
இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், பாரிஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் சீனா தலைமையிலான உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் ஒத்துழைப்புக்கு, EFF இன் இரண்டாவது தவணையைப் பெற தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்குவதன் மூலம் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு கொள்கையளவில் ஒப்புக்கொண்டதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்