கொழும்பில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சள் மீட்பு!
கொழும்பு 15 இல் உள்ள தனியார் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 765 கிலோ மஞ்சள் நுகர்வோர் அதிகார சபை புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
நுகர்வோர் அதிகார புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
பற்றுச்சீட்டு இல்லாமல், சந்தையில் விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான மஞ்சளே கைப்பற்றப்பட்டுள்ளது
இந்த மஞ்சள் தொகை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.