சாதிப் பிரச்சினை பற்றி விவேகானந்தர் சொன்ன தத்துவ கருத்துக்கள்!
171. சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற குணங்கள் மூன்றும் ஒவ்வொரு மனிதனிடமும் அதிக அளவிலோ குறைந்த அளவிலோ அமைந் திருக்கின்றன.
அதுபோலவே பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, நான்காம் வருணத் தன்மை ஆகிய நான்கும் ஒவ்வொரு மனிதனிடமும் அதிக அளவிலோ குறைந்த அளவிலோ இருக் கின்றன.
ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு குணம் தலைதூக்கி மேலெழுந்து தோன்றும். உதாரணமாக: ஒரு மனிதன் சம்பளத்திற்கென்று மற்றொருவரிடம் வேலை செய்யும் போது நான்காம் வருணத் தன்மையில் இருக்கிறான்;
அதே மனிதன் பொருள் கருதிச் சொந்த முறையில் வியாபாரத்தில் முயற்சி செய்யும்போது வைசியன் ஆகிறான்;
தீயவர்களைத் தண்டிக்கச் சண்டை செய்யும்போது அவனே தன்னிட முள்ள க்ஷத்திரியத் தன்மையை வெளிப்படுத்து கிறான்;
அதே மனிதன், கடவுளைத் தியானிப்ப திலும் அவரைக் குறித்து உரையாடுவதிலும் காலத்தைக் கழிக்கும்போது பிராம்மணன் ஆகிறான்.
இயல்பாகவே ஒருவன் ஒரு சாதியி லிருந்து தன்னை மற்றொரு சாதிக்கு மாற்றிக் கொள்ள முடியும்;
அது இயற்கையுமாகும். அப்படி இல்லாவிட்டால், விசுவாமித்திரர் பிராம்மணரானதும் பரசுராமர் க்ஷத்திரியரான தும் எப்படி?
172. நமது இலட்சியத்தின் மேற்படியில் பிராம்மணன் இருக்கிறான்; கீழ்ப்பகுதியில் சண்டாளன் இருக்கிறான்.
சண்டாளர்கள் அனை வரையும் பிராம்மணர் நிலைக்கு உயர்த்துவதே நாம் செய்ய வேண்டிய வேலையாகும்.
173. சாதி ஏற்பாடு வேதாந்த மதத்திற்கு விரோதமானது. சாதி என்பது ஒரு வழக்கமே தவிர வேறில்லை .
174. சமயத்துறையில் சாதி என்பது கிடை யாது. சாதி என்பது வெறும் சமூக ஏற்பாடேயாகும்.
ஆதலால், மதத்தைக் குறை சொல்லிப் பயனில்லை, மக்களைத்தான் குற்றம் சொல் வேண்டும்.
175. சாதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உரிய வழி, மேலேயுள்ளவர்களைக் கீமே இழுப்பதன்று.
கீழ்ச் சாதியினரை மேல் சாதி யினரின் நிலைக்கு உயர்த்துவதுதான் சாதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உரிய வழியாகும்.
Tamilsk.com
176. தற்காலச் சாதி வேற்றுமையானது இந்தியாவின் முன்னேற்றத்துக்கு ஒரு தடைக் கல்லாகும்.
அது வாழ்வைக் குறுக்குகிறது; கட்டுப் படுத்துகிறது; பிரிவினை செய்கிறது. அறிவு வெள்ளத்தின் முன்பாக அது விழுந்துமாயும்.
177. இந்தியாவில் வாழும் இதரப் பிரிவின ரின் மேன்மைக்குப் பிராம்மணன் பாடுபட்டு உழைக்க வேண்டும்.
இப்படி உழைப்பவனே பிராம்மணன் ஆவான். இப்படிச் செய்யாமல் பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டு இருப்பவன் பிராம்மணன் ஆகமாட்டான்.
178. தான் நெடுங்காலமாகச் சேகரித்து வைத் திருக்கும் ஞானத்தைப் பிராம்மணன் பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.
இப்படி வழங் காததன் விளைவாகவே நம் நாட்டின்மீது முகம் மதியர் படையெடுப்பது சாத்தியமாயிற்று.
இது காரணமாகவே ஆயிரம் ஆண்டுகளாக அந்நியர் களின் படையெடுப்புக்களுக்கு உள்ளாகி, அவதிப்பட்டு நலிகிறோம்.
179. பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது, அவர்களை அவமதிப்பதாகும்.
பட்டினி கிடக்கும் மனி தனை அணுகி, அவனுக்குத் தத்துவ போத னைகள் செய்வது அவனை அவமதிப்பதாகும்.
180. நமது நாட்டு ஏழைகள் உணவில்லாமல் பட்டினி கிடப்பதைக் காணும்போது பூஜை முதலியவற்றையும், கல்வியையும் தூர எறிந்து விட்டு, சாதனையாலும் புலனடக்கத்தாலும் வந்த ஆற்றலால் பணக்காரர்களின் மனதைத் திருப்பி, பணம் திரட்டி, ஊர் ஊராகச் சென்று ஏழைகளுக்குத் தொண்டு புரிவதில் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாகிறது.
181. நான் ஒரு சோஷலிஸ்டு; சோஷலிஸத் திட்டம் பரிபூரணமானது என்ற கருத்தில் அதை நான் ஆதரிக்கவில்லை.
உணவே இல்லாமல் இருப்பதைவிட அரைவயிறு உணவு சிறந்தது என்பது என் கருத்தாகும்.
182. உண்பது, பருகுவது போன்ற தினசரி நடைமுறைகளைக் கடந்து இந்தியப் பாமர மக்களின் சிந்தனை சிறிதுகூட மேலே செல்லவில்லை.
183. இந்தியாவின் பாமர மக்களாகிய இந்த ஏழை எளியவர்களை நாம் உயர்த்த வேண்டும்.
அவர்களின் முன்னேற்றத்திற்கு உரிய கருத்துக்களை நம்பிக்கையோடும் சிரக்யோடும் அன்பான சொற்களால் அவர்களும் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் “நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களே எங்களுக்கு உள்ள உரிமைகள் அத்தனையும் உங்களுக்கும் உண்டு ‘ என்று நாம் அவர் களுக்குச் சொல்ல வேண்டும்.
Tamilsk.com
184. இந்தியாவின் பாமர மக்களுக்குச் சிறந்த கல்வியையும், நல்ல உணவு வசதிகளையும் கொடுத்து, அவர்களை நன்றாகக் கவனிக்க வேண்டும்.
அந்தப் பாமர மக்கள்தாம் நம் முடைய கல்விக்கு வரியாகப் பணம் தரு கிறார்கள். அவர்களே நமது கோயில்களையும் கட்டுகிறார்கள்.
ஆனால் அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைப்பதோ வெறும் உதைகள்தாம். நடைமுறையில் அவர்கள் நம் அடிமைகளாகவே இருக்கின்றனர்.
இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், இந்தப் பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.
165. நீர்வளம், நிலவளம் நிறைந்த இந்த நாட்டிலே மற்ற நாடுகளைக்காட்டிலும் ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடிய நிலவளமுள்ள இந்த நாட்டிலே, வயிற்றுக்குச் சோறும் இன்றி, உடம்பைப் போர்த்துக் கொள்ள உடையும் இன்றி மக்கள் வாடுகிறார்கள்,
186. கடினமாக உழைத்தும் கீழே தள்ளி மதிக்கப்படுகிற கோடிக்கணக்கான ஏழை மக்களுடைய இதய இரத்தத்தைக் கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டும் சுகபோகத்தில் வளர்க் கப்பட்டும் வந்துள்ள ஒருவன், அந்த ஏழை மக்களுடைய நலத்தைப்பற்றிச் சிந்திக்கவும் செய்யாமல் இருப்பானேயானால், அவனை நான் துரோகி என்றுதான் சொல்வேன்.
187. ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர் கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர் களே உன்னுடைய தெய்வங்களாக விளங் கட்டும்.
188. எல்லா நாடுகளிலும், நாட்டின் ஆதார மான முதுகெலும்பு போன்று இருப்பவர்கள் அந்த நாட்டின் உழைப்பாளி மக்களே ஆவர்.
தாழ்ந்த வகுப்பினர் என்று நீங்கள் நினைக்கிற இவாகள் தமது தொழிலைச் செய்வதை நிறுத்தி விடுவார்களேயானால், உங்களுக்கு உணவும் உடையும் எங்கிருந்து வரும்?
விவேகானந்தர் சொன்ன ஏனைய தத்துவங்கள்
இந்தியப் பெண்மணிகள் பற்றி சுவாமி விவேகானந்தர் சொன்ன கருத்துக்கள்!
கல்வியின் அவசியம் பற்றி விவேகானந்தர் சொன்ன தத்துவங்கள்!