சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்த தந்தைக்கு துாக்கு தண்டணை!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வளர்ப்பு தந்தை அலெக்ஸ் பாண்டியனுக்கு கேரள உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

2021-ம் ஆண்டு, சிறுமி உடலில் 67 காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது இரண்டாவது கணவரான அலெக்ஸ் பாண்டியன் மீது விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கொலை, பாலியல் பலாத்காரம், போக்சோ சட்டம் உள்ளிட்ட 16 பிரிவுகளில் அலெக்ஸ் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, தூக்கு தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால், அது சட்டப்படி வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.