ஜனாதிபதியினை சந்தித்தார் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம்!
(LBC Tamil) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற சங்க செயலாளர் ஸ்டீபன் டுவிக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.