தப்பியது தலதா மாளிகை! அரசு மீது தேரர் சீற்றம்!
தலதா மாளிகையானது கண்டியில் உள்ளதனால் தப்பியதாகவும், கொழும்பிலே இருந்து இருந்தால் அதையும் தற்போதைய அரசாங்கம் விற்றிருக்குமென எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
கடுமையான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்சி அமைக்க கொண்டு வரப்பட்ட இவ் அரசாங்கம், தற்போது நாட்டு மக்களுக்கு எதிரான செயற்பாட்டையே முன்னெடுத்து வருகிறது.
நாட்டினது சுபீட்சத்துக்காகவே அரசாங்கம் செயற்படுவதாக கூறிக் கொண்டாலும், அரசாங்கம் அவ்வாறு செயற்படவில்லை.
மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை விட இப்போதைய அரசாங்கம் பாரியளவில் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து வருகிறது/
நல்ல வேளை தலதா மாளிகையானது கொழும்பில் இல்லை. கொழும்பில் இருந்திருந்தால், அதனையும் விற்று இருப்பார்கள்.
நாட்டினது வளங்கள் குறித்து நாட்டினது மக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
எதிர்கால சந்ததியினருக்காக கையளிப்பதற்காக இந்த நாடு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.