பாடசாலை மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் லீக்!
இலங்கையில், பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகப்படுத்தி, நிர்வாண புகைப்படங்களாக மாற்றி அச்சுறுத்தும் மற்றும் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களில் அதிகமான அளவில் உயர் தர மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும், இதை தடுக்க பெற்றோர்களும் பாடசாலைகளும் மாணவர்களது சமூக ஊடக நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.