பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது

கல்கிரியாகம பகுதியில் 27 வயதான யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 41 வயது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை பாதிக்கப்பட்ட யுவதியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் அளித்ததைத் தொடர்ந்து, விசாரணையின் மூலம் இந்த கைது நிகழ்ந்தது.

சந்தேக நபர் கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, பாதிக்கப்பட்ட யுவதி நீண்ட காலமாக சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேக நபரிடமிருந்து முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் இன்று (நவம்பர் 18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.