வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சடலமொன்று மீட்பு
வவுனியாவின் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் சடலம் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது தடவியல் பொலிஸார் விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். மேலும், பதில் நீதிவான் தி.திருவருள் சம்பவ இடத்திற்கு வந்து, சட்டத்தினை பார்வையிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.