வாகனத்தில் பயணிக்கும்போது காவல்துறைக்கு தேவைப்படும் கட்டாய ஆவணங்கள் பற்றிய அறிவிப்பு
சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான முரண்பாடான தகவல்கள் காரணமாக, வீதியில் பயணிக்கும் போது ஆவணங்கள் கட்டாயம் அவசியம் என பொலிஸார் மீள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
அனைத்து சாரதிகளும் சாதாரண வாகனங்களுக்கு 4 ஆவணங்களும் மின்சார வாகனங்களுக்கு மாத்திரம் 3 ஆவணங்களும் கனரக வாகனங்களுக்கு ஐந்து ஆவணங்களும் வைத்திருக்க வேண்டுமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1) ஓட்டுநர் உரிமம்
2 ) வருவாய் உரிமம்
3) வாகன காப்பீடு
4) வாகன புகைப்பரிசோதனை சான்றிதழ்
கனரக வாகனங்களுக்கு மட்டும்
5)வாகன தகுதி சான்றிதழ்
வாகனத்தில் பயணிக்கும் போது சிலர் வாகனப் பதிவுச் சான்றிதழை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என பொலிஸ் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையில் வாகனம் ஒன்றை எடுத்துச் செல்வது தொடர்பான சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் வாகன புத்தகம் அவசியமென தவறாகத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.