மிகப்பெரிய இரத்தினத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீலக்கல்லான ஆசியாவின் ராணி எனப் பெயரிடப்பட்ட கல்லை 100மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு 2விற்பனை செய்ய இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவிக்கையில்,
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகபெரிய இரத்தினக்கல்லான ‘ஆசியாவின் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்க டுபாய் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.
எனினும் குறித்த விலையில் இரத்தினகல்லினை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை.
டுபாய் நாட்டினை சேர்ந்த நிறுவனமென்றே இவ்விலையை அறிவித்துள்ளது.
இதனை விடவும் அதிகவிலையினை எதிர்பார்ப்பதாகவும் அதற்காக ஏலத்தில் விடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை பகுதியிலுள்ள சுரங்கம் ஒன்றிலிருந்து 310Kg எடை கொண்டா ‘கொரண்டம்’ வகை மாணிக்கக்கல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.