13வது திருத்தம், எதிர்த்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டாம் என வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்று கையளித்துள்ளனர்.




